தூத்துக்குடி VOC கல்லூரி ஆண்டு விழா -DSP பிரகாஷ் பரிசுகள் வழங்கினார்
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விலங்கியல் துறைக்கான 2019-2020ம் ஆண்டுவிழா விலங்கியல் துறை அரங்கில் வைத்து நடைபெற்றது, இதில் தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் இரா.பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி அனைத்து துறை சார்ந்த மாணவர், மாணவியர் இடையே நடைபெற்ற அறிவியல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். அதன்பின் காவலன் SOS APP தொடர்பாக விழிப்புணர்வு உரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் வீரபாகு , மர்காஷிஸ் கல்லூரி முதல்வர் அருள்ராஜ், விலங்கியல் துறை தலைவர் ராதிகா, துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.